நாட்றம்பள்ளி அருகே சுடுகாட்டிற்கு வழி கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரதபோராட்டம்

நாட்றம்பள்ளி அருகே சுடுகாட்டிற்கு வழி கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரதபோராட்டம்
X
நாட்றம்பள்ளி அருகே சுடுகாட்டிற்கு வழி கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரதபோராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சுடுகாட்டிற்கு வழி கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரதபோராட்டம் வட்டாட்சியர் மற்றும் போலீசார் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் ஊராட்சி, பைனப்பள்ளி கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் அதே பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இறந்தவரின் சடலங்களை அடக்கம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சுடுகாட்டிற்கு செல்லும் பகுதியில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுடுகாட்டிற்கு செல்லும் வழி தடைப்பட்டதாக தெரிகிறது. பின்னர் இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சுடுகாட்டிற்கு செல்ல வழி இல்லை என்றும் பல ஆண்டுகளாக இங்கு ஓடை வழி உள்ளது என சுடுகாட்டுக்கு செல்ல வழி விட வேண்டும் எனக்கூறி தனி நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பெங்களூர் -சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி தாசில்தார் காஞ்சனா, போலீசார், ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் சிவன் உள்ளிட்ட பலர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது வட்டாட்சியர் முன்பும் காவல்துறையினர் முன்பும் ஆபாசமான வார்த்தைகளை பேசி இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் சுடுகாட்டிற்கு செல்ல அரசு புறம்போக்கு இடம் உள்ளதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் இது சம்பந்தமாக வரும் செவ்வாய்க்கிழமை நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பீஸ் கமிட்டி கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story