நாகுடி அருகே ஓட்டு வீட்டில் திடீர் தீ விபத்து

நாகுடி அருகே ஓட்டு வீட்டில் திடீர் தீ விபத்து
X
விபத்து செய்திகள்
புதுக்கோட்டை, நாகுடி அடுத்த மணவளநல்லூரைச் சேர்ந்தவர் ஜஸ்டின் திரவியம் (41). இவர் திருப்பூருக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். அப்போது நாகுடியில் உள்ள அவரது ஓட்டு வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் வீட்டிற்கு வந்த அவர் நாகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நாகுடி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story