கஞ்சாவை விற்பனை செய்தவாலிபர்கள் கைது

X
ஈரோடு மாநகர பகுதியில் சமீப காலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ரோந்து பணியை தீவிரப்படுத்தி பல்வேறு பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு டவுன் போலீசார் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வி.வி. சி.ஆர் நகர் பகுதியில் சென்ற போது அங்கு சந்தேகப்படும்படியாக இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் ஈரோடு வி வி சி ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்கிற மொட்டை கார்த்தி (22), வளையக்கார வீதியைச் சேர்ந்த அஜித்குமார் (24) என தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்தபோது அதில் ரூ.2.40 லட்சம் மதிப்பிலான 6 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து டவுன் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story

