காரிமங்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

காரிமங்கலம் வட்டம் எலுமிச்சம்பள்ளி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் ஏராளமானோர் பங்கேற்பு
காரிமங்கலம் வட்டத்துக்கு உட்பட்ட எலுமிச்சன அள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று காரிமங்கலம் திமுக ஓன்றிய தலைவர் MVP.கோபால் தலைமையில் நடந்தது.இதில் வட்டாட்சியர் சுகுமார் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சர்வோதமன், தனலட்சுமி மற்றும் திமுக சட்டமன்ற தொகுதி பார்வையாளர் அரியப்பன் திமுக மாவட்ட விவசாய அணி தலைவர் குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், உட்பட பலர் பங்கேற்றனர். மேலும் இதில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த ஏளமான பொதுமக்கள் மகளிர் உரிமைத்தொகை, புதிய குடும்ப அட்டை, முதியோர் ஓய்வூதிய தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை முகாமில் வழங்கினர்.
Next Story