‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயர் சிறப்பு மருத்துவ முகாம்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயர் சிறப்பு மருத்துவ முகாம்
X
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயர் சிறப்பு மருத்துவ முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்' உயர் சிறப்பு மருத்துவ முகாம் இன்று முதல் டிசம்பர் மாதம் 27-ந் தேதி வரை 21 முகாம்கள் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் http://ranipet.nic.in என்ற இணையதளத்தில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். முகாமினை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். பின்னர் காணொலி காட்சி வாயிலாக பிற மாவட்டங்களிலும் தொடங்கி வைக்கிறார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வாலாஜா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமில் பங்கேற்கிறார். ஆகவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பகுதியில் நடைபெறும் "நலம் காக்கும் ஸ்டாலின்" உயர் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story