அம்மூரில் விவசாயிகள் மறியல் போராட்டம்!

X
அம்மூர் பகுதியில் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்திற்கு ஏராளமான விவசாயிகள் நெல் விற்பனைக்கு எடுத்து வருகின்றனர். அந்த வகையில் விவசாயிகள் தங்களது நெல் மூட்டையை விற்பனை செய்ய எடுத்து வந்தனர். அப்போது, நெல் மூட்டைகளை எடை போட்ட பின்னர் அதற்கு விலை நிர்ணயிக்காமல் அலைக்கழித்ததாக தெரிகிறது. எனவே உடனடியாக தங்களது நெல் மூட்டைகளுக்கு விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் எனக்கூறி விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் அம்மூரில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீசார் விவசாயிகளுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உத்தரவாதத்தின் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
Next Story

