போளூர் : முத்துமாரியம்மன் ஆலய கூழ் வார்த்தல் திருவிழா.

X
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் குளத்து மேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 87 ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. போளூர் டவுன் குளத்து மேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் 87 ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ முத்துமாரியம்மன் பல்வேறு வகையான மலர்களால் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில் ஊஞ்சல் தாலாட்டு வைபவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நகரின் முக்கிய ரீதியான வட்டாட்சியர் அலுவலகம் சாலை, பஜார் வீதி, சிந்தாதிரிப்பேட்டை தெரு, வீரப்பன் தெரு, பேருந்து நிலையப் பகுதி, டைவர்ஷன் ரோடு, திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மேள தாளங்கள் முழங்க சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. வழிநெடுங்கிலும் தேங்காய், பூ, பழம் உள்ளிட்ட பொருட்களுடன் பக்தர்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர் மேலும் மறுநாள் அதனைத் தொடர்ந்து 108 பக்தர்களின் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் அலங்காரமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் அல்லிநகர், வசூர், குன்னத்தூர், ரெண்டேரிப்பட்டு, பாப்பம்பாடி, வெண்மணி, அத்திமூர், மாம்பட்டு, எழுவாம்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story

