நொய்யல் ஆற்றில் குப்பையில் தீ விபத்து: வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல்!

X
கோவை, சூலூர் அருகே காமாட்சிபுரத்தில் நொய்யல் ஆற்றங்கரையில் கொட்டப்பட்ட குப்பைகள் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டதில், புகை பரவலாக விரிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி சாலையை மூடிய புகையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். இருகூர் பேரூராட்சியில் இருந்து தினசரி குப்பைகள் இப்பகுதியில் கொட்டப்பட்டு, அவ்வப்போது ஊழியர்களால் தீவைக்கப்படும் நடைமுறையை மக்கள் எதிர்த்தும், இது தொடர்ந்துவந்தது. இந்த நிலையில் நேற்று காலை ஏற்பட்ட தீவிபத்துக்காக சூலூர் தீயணைப்பு படை விரைந்து செயல்பட்டது. புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

