கோவை செம்மொழிப் பூங்கா பணியில் பாதுகாப்பின்றி சாக்கடை தூய்மை: வேதனையை ஏற்படுத்தும் நிலை !

கோவை செம்மொழிப் பூங்கா பணியில் பாதுகாப்பின்றி சாக்கடை தூய்மை: வேதனையை ஏற்படுத்தும் நிலை !
X
சாலையில் உள்ள சாக்கடைத் தூய்மையில் ஈடுபட்ட மாநகராட்சி தொழிலாளர்கள், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணிபுரியும் நிலை.
கோவை பார்க் கேட் பகுதியில் செம்மொழிப் பூங்கா கட்டிடப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக சாலையில் உள்ள சாக்கடைத் தூய்மையில் ஈடுபட்ட மாநகராட்சி தொழிலாளர்கள், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் (கையுறை, முககவசம்) இல்லாமல் பணிபுரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அவல நிலைபாடுகள், நோய் தொற்றுக்கு உள்ளாக்கும் அபாயங்களை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் ஒப்பந்ததாரர்களுக்கு அதிகாரிகள் கண்டிப்பான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story