கோவை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சங்கமேஸ்வரர் கோவிலில் ஆய்வு

X
கோவையில் உள்ள அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவிலில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பழமையான சிலைகள் மாற்றப்பட்டுள்ளதா, பாகங்கள் சுரண்டப்பட்டுள்ளதா என்பதையும், கோவில் ஆவணங்களைச் சரிபார்ப்பதையும் குழுவினர் செய்தனர். இந்த ஆய்வில் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை ஈடுபட்டது. இதற்கமுன், கோனியம்மன் கோவிலிலும் மேற்கொண்ட ஆய்வின் தகவல்களுடன், ஆய்வு அறிக்கையை சென்னை மையத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.
Next Story

