கோவையில் விமானவியல் கண்காட்சி: பள்ளி மாணவர்கள் உற்சாகம் !

கோவையில் விமானவியல் கண்காட்சி: பள்ளி மாணவர்கள் உற்சாகம் !
X
கோவை குனியமுத்தூரில் உள்ள நேரு விமானவியல் கல்லூரியில் “ஏரோ பிளஸ் 2025” என்ற தலைப்பில் விமானவியல் கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது.
கோவை குனியமுத்தூரில் உள்ள நேரு விமானவியல் கல்லூரியில் “ஏரோ பிளஸ் 2025” என்ற தலைப்பில் விமானவியல் கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இக் கண்காட்சியில் விமானங்கள், ட்ரோன்கள், விமான பாகங்கள் மற்றும் ஆப்பிரிக்கா, அண்டார்டிகா போன்ற கண்டங்களைப் பிரதிபலிக்கும் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான நேற்று பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த மாணவர்கள் விழாவைப் பார்த்து ரசித்து, விமானங்கள் குறித்த அறிவை கல்லூரி மாணவர்களிடமிருந்து பெற்றனர். விமானங்கள் முன் நின்று மாணவர்கள் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். முதல் இரண்டு நாட்கள் பள்ளி மாணவர்களுக்கும், ஞாயிறன்று பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
Next Story