தி.மு.க அரசு சாதி ஆணவ படுகொலைக்களுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தல் !

தி.மு.க அரசு சாதி ஆணவ படுகொலைக்களுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தல் !
X
சாதி அடிப்படையிலான கொலைகளுக்கு தீர்வு தர தனிச்சட்டம் அவசியம் என கூறி தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்.
நெல்லையில் கவின் செல்வ கணேஷ் சம்பவம் உள்ளிட்ட சாதி ஆணவப் படுகொலைகளை கண்டித்து, தமிழகத்தில் தனிச்சட்டம் ஏற்படுத்த வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தனிச்சட்டம் கொண்டு வருவதாக கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் சட்டம் இயற்றப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். சாதி ஆணவ படுகொலைகளை கும்பல் கொலை எனக் கருதி, தனிச்சட்டத்தின் கீழ் கையாள வேண்டும் என்றும், தற்போதைய ஐ.பி.சி சட்டத்தின் கீழ் தண்டித்தல் போதாது என்றும் வலியுறுத்தினர்.
Next Story