சிங்காநல்லூர் உழவர் சந்தையில் எடை மோசடி: நுகர்வோருக்கு எச்சரிக்கை!
கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தையில் உள்ள பழக்கடையில், எடை மோசடி சம்பவம் ஒன்று பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 கிலோ ஆப்பிள் வாங்கிய நபர், வேறு கடையில் எடை பார்த்தபோது 1,800 கிராம் என்றதே தெரிந்தது. பின்னர் மீண்டும் பழக்கடையில் சோதனையில், ஒரு பட்டனை அழுத்தியபின் எடை சரியாக காட்சியளித்தது. இதனால், எடை இயந்திரத்தில் முறைகேடு மூலம் பழங்களை குறைவாக விற்றது தெரியவந்தது. இது போன்ற மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், நுகர்வோர் விழிப்புடன் இருக்கவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story



