மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது – கோவையில் பரபரப்பு சம்பவம்!

மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது – கோவையில் பரபரப்பு சம்பவம்!
X
கோவை பேருந்து நிலையத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் சிறையில் அடைப்பு.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பழனி (49), தனது மனைவி சரசுவுடன் (50) கோவை சேரன் நகரில் தங்கி வேலை பார்த்துவந்தார். அடிக்கடி குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்த பழனி, சமீபத்தில் மனைவியை சேரன் நகரப் பேருந்து நிலையத்தில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இது பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்ந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது. படுகாயமடைந்த சரசு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். மகன் பரதன் பீளமேடு போலீசில் அளித்த புகாரின் பேரில் பழனி நேற்று கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story