மாரி கவுண்டம்பாளையம்-காரை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து தென்னை மரத்தில் மோதி விபத்து.

மாரி கவுண்டம்பாளையம்-காரை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து தென்னை மரத்தில் மோதி விபத்து.
மாரி கவுண்டம்பாளையம்-காரை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து தென்னை மரத்தில் மோதி விபத்து. கரூர் மாவட்டம் , மன்மங்கலம் தாலுக்கா , அரங்கநாதன் பேட்டை , வடக்கு தெருவை சேர்ந்தவர் சசிகுமார் வயது 35. இவர் ஜூலை 30ஆம் தேதி மாலை 4 மணி அளவில் மன்மங்கலத்தில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அவரது காரில் சென்றார். மாரி கவுண்டம்பாளையம் ரயில்வே பாலம் அருகே சென்றபோது காரை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தென்னை மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சசிகுமாரை மீட்டு கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அறிந்த சசிகுமாரின் மனைவி சுடர்விழி வயது 32 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர் , காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சசிகுமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.
Next Story