ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து பைக் மீது மோதியதில் ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில்  தனியார் பேருந்து பைக் மீது மோதியதில் ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்...
X
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து பைக் மீது மோதியதில் ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்...*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து பைக் மீது மோதியதில் ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்... ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசலு மகன் தொர்கிலு கார்த்திக்(20). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோயிலில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அதே பல்கலையில் பயிலும் ஆந்திரா மாநிலம் ஆனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்த வலசமூர்த்தி மகன் ரோஹித்(19) என்பவருடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பைக்கில் சென்றார் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன்கோவில் தனியார் கல்லூரி அருகே சென்ற போது ராஜபாளையத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்கையில் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார்த்திக், ரோஹித் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த கிருஷ்ணன் கோவில் போலீஸார் இருவரின் உடல்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . விபத்து குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story