ராஜபாளையம் அருகே புத்தூர் மலையடிவார பகுதியில் இரவு பகலாக நடைபெற்று வரும் சவுடு மண் கொள்ளையை தடுக்க நடிவடிக்கை எடுக்க வேண்டு என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்*

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே புத்தூர் மலையடிவார பகுதியில் இரவு பகலாக நடைபெற்று வரும் சவுடு மண் கொள்ளையை தடுக்க நடிவடிக்கை எடுக்க வேண்டு என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் உள்ள மலை அடிவரப் பகுதியில் உரிய அனுமதி இன்றி சட்டவிரோதமாக சவுடு மண் கடத்தப்பட்டு வருகிறது. டிப்பர் லாரி டிராக்டர் என சரிவர நம்பர் பிளேட் ஒட்டப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் சவுடு மண் அல்லப்பட்டு கடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மண் வளத்தை பல அடி ஆழத்திற்கு தோண்டி கடத்தப்பட்டு வருவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு முக்கிய காரணம் விளங்கும் பனை மரங்கள் அழிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கனிமவளத் துறை அதிகாரிகள் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ப்த்தி தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகமும் கனிம வளத்துறை அதிகாரிகளும் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு கனிம வள கொள்ளையை தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

