சிவகாசி அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு குடோனுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை....

சிவகாசி அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு குடோனுக்கு வருவாய் துறையினர்  சீல் வைத்து அதிரடி நடவடிக்கை....
X
சிவகாசி அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு குடோனுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை....
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு குடோனுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை.... சிவகாசி அருகே தாயில்பட்டி பசும்பொன் நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான குடோனை ராஜசேகர் மற்றும் மோகன் ஆகியோர் வாடகைக்கு எடுத்து அங்கு வைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக வருவாய்த் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் எளிதில் தீப்பற்றி வெடிக்க கூடிய பேன்சி ரக பட்டாசு உள்ளிட்ட பல்வேறு வகையான பட்டாசுகளை சட்டவிரோதமாக தயாரித்து பதுக்கி வைத்து ஒரு மினி பட்டாசு ஆலையே அங்கு செயல்பட்டு வந்தது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு மற்றும் ரசாயன மூலப்பொருள்களை பறிமுதல் செய்து அருகில் பள்ளம் தோண்டி தண்ணீர் ஊற்றி அதனை அளித்ததுடன் சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு குடோனுக்கு சீல் வைத்தனர். இச்சம்பவம் குறித்து பாலசுப்பிரமணியன், ராஜசேகர், மோகன் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story