விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

X
விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி.... விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இதனைத் தொடர்ந்து மாலையில் விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அல்லம்பட்டி, பாண்டியன் நகர், சூலக்கரை, சத்திரரெட்டியாபட்டி, கே.உசிலம்பட்டி, வள்ளிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு விவசாய பணிகளை துவங்கும் விவசாயிகளுக்கு இன்று பெய்துள்ள மழை நம்பிக்கையை தந்துள்ளது.
Next Story

