கதவணைக்கு நிலம் கையகபடுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு உடனே வழங்க வேண்டும்.

கதவணைக்கு நிலம் கையகபடுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு உடனே வழங்க வேண்டும்.
கதவணைக்கு நிலம் கையகபடுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு உடனே வழங்க வேண்டும். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூர் மாவட்ட குழு கூட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சித்தலவாயில் மாவட்டத் தலைவர் கே.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலார் கே.சக்திவேல்,மாவட்ட பொருளாளர் கே.சுப்பிரமணி,ஏ.நாகராஜன்,ஏ.முனியப்பன்,டி.இளங்கோவன்,பி.ரவிக்கண்ணன் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு நிலம் கையகப்படுத்தபட்டதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைத்திட தமிழக அரசும்,நீர்வளத்துறையும் இழப்பீடு கிடைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரூர் மாவட்டம் க.பரமத்தி,கடவூர் ஒன்றிய பகுதிகளில் விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு,கூடுதல் இழப்பீடு கேட்டு உயர் மின் அழுத்த கோபுரத்தால் பாதிக்கப்பட்ட 63 விவசாயிகள் கடந்த 19 மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்தித்து 63 மனுக்கள் கொடுக்கப்பட்டது. மேற்கண்ட மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டும்.சம்பந்தப்பட்ட பவர் கிரீட் நிர்வாகம் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை,ஆகவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு,கூடுதல் இழப்பீடு கிடைத்திட மாவட்ட நிர்வாகம் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கரூர் மாவட்டக்குழுவின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Next Story