ஜெயங்கொண்டம் அருகே ஆடு திருடி மோட்டார் சைக்கிளில் சென்ற மூவரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

X
அரியலூர், ஆக.2- ஜெயங்கொண்டம் அருகே ஆடு திருடி மோட்டார் சைக்கிளில் சென்ற மூவரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் மாயவேல் (75). இவர் ஆடு வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரிடம் ஆறு ஆண் ஆடு ஒரு பெண் ஆடு வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆக 1. ந் தேதி அன்று மாலையில் மழை பொழிந்ததால் ஆடுகளை வீட்டில் சுவர் ஓரமாக கட்டிவிட்டு உள்ளே சென்று மாயவேல் தூங்கிக் கொண்டிருந்தார். ஆக 2-ந் தேதி(நேற்று) அதிகாலையில் 5 மணி அளவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டதும் மாயவேல் மற்றும் அவரது மகன் எழுந்து வந்து வெளியில் வந்து பார்த்தனர் அப்போது மூன்று பேர் மோட்டாரோ சைக்கிளில் ஏற்றி செல்ல ஆடுகளை தூக்கிச் சென்றனர். சத்தம் போட்டவுடன் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர் அதற்குள் ஒருவரை மட்டும் விட்டுவிட்டு மற்ற இருவர் ஆடுகளை தூக்கி தப்பிசென்று விட்டனர் ஒருவர் தூக்கிச் சென்ற ஆட்டுடன் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் மாயவேல் புகார் கொடுத்தார் போலீசாரின் விசாரணையில் ஆட்டுடன் பிடிபட்ட ஆண்டிமடம் விளந்தை காலனி தெரு பெரியசாமி மகன் பழனிசாமி (23) என்பது தெரிய வந்தது இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் பழனிச்சாமியை கைது செய்து மோட்டார் சைக்கிளுடன் தப்பிச்சென்ற மற்ற 2 பேரை தேடி விசாரித்து வருகின்றார்.அதிகாலையில் நடந்த இந்த ஆட்டு திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Next Story

