செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த சட்டமன்ற உறுப்பினர்

X
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சி, சின்னவெண்மணி, படாளம், சித்தாதூர், பவுந்தங்கரணை மேலும் பல பகுதிகளில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நகர வாழ் மக்களுக்கு பட்டா வழங்குவது, மயான சாலை அமைப்பது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பது, அங்கன்வாடி கட்டிடம் கட்டுவது, சேதமடைந்த நியாய விலைக் கடையை சீரமைப்பது, சிமெண்ட் சாலை அமைப்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.அதனை தொடர்ந்து இன்று(02.08.2025) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனுக்கள் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
Next Story

