ராசிபுரத்தில் வீட்டு உபயோக பொருட்காட்சி அமைக்க வணிகர்கள் எதிர்ப்பு : நடவடிக்கை இல்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்...

ராசிபுரத்தில் வீட்டு உபயோக பொருட்காட்சி அமைக்க வணிகர்கள் எதிர்ப்பு : நடவடிக்கை இல்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்...
X
ராசிபுரத்தில் வீட்டு உபயோக பொருட்காட்சி அமைக்க வணிகர்கள் எதிர்ப்பு : நடவடிக்கை இல்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்...
ராசிபுரம் நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடைபெறவுள்ள வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சிக்கு நகராட்சி நிர்வாகம் அனுமதிக்கக்கூடாது என ராசிபுரம் நகர அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். ராசிபுரம் நகரில் தனியார் நிறுவனம் சார்பில் சேலம் சாலையில் 40 அரங்குகள் கொண்ட வீட்டு உபயோக பொருட்காட்சிக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆக.14-ல் தொடங்கி ஒரு மாதம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ள இதில் மேஜிக் நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகளும் ஏற்படுத்துவதாக தெரிகிறது. இதேபோல் மற்றொரு இடத்தில் திருமண மண்படத்திலும் இது போன்ற கண்காட்சி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் இடங்களிலோ, திருமண மண்படத்திலோ வீட்டு உபயோக பொருட்காட்சிக்கு அனுமதி வழங்கினால் உள்ளூர் வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதற்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது என ராசிபுரம் நகர அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் மனு அளித்துள்ளனர். இது குறித்து நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தலைவர் எஸ்.பாலாஜி, செயலர் ஆர்.திருமூர்த்தி, பொருளாளர் மன்னார்சாமி, நிர்வாகி ஜி.தினகர் உள்ளிட்டோர் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். ஏற்கனவே நீதிமன்றம் இது போன்ற விற்பனை பொருட்கள் அமைக்க நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினர். மேலும் நகராட்சி நிர்வாகம், ராசிபுரம் டிஎஸ்பி., நகர்மன்றத் தலைவருக்கு இது தொடர்பாக மனு அனுப்பியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வணிகர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுட போவதாக தெரிவித்துள்ளனர்.
Next Story