ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரயிலில் அடிபட்டு பலி

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரயிலில் அடிபட்டு பலி
X
வடமதுரை அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரயிலில் அடிபட்டு பலி
திண்டுக்கல், நத்தம், மணக்காட்டூர் பகுதியை சேர்ந்த பொன்னையா(65) இவர் வடமதுரை அருகே தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார் இந்நிலையில் இன்று மாலை சந்தைக்கு காய்கறிகள் வாங்குவதற்காக வடமதுரை ரயில் நிலையத்தில் நடைமேடை 1-ல் தண்டவாளத்தை கடக்கும்போது தேஜஸ் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கேசவன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்னையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story