புதிய பேராயரை வாழ்த்திய பாஜக தலைவர்.

X
மதுரை உயர்மறை மாவட்டத்தின் 7 ஆவது பேராயராக அந்தோனிசாமி சவரிமுத்து அவர்கள் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று (ஆக. 2) நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு, திருத்தந்தையின் இந்தியத் தூதுவர் பேராயர்.லியோபோல்டோ ஜிரெல்லி அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேராயர் அந்தோனிசாமி சவரிமுத்து அவர்களை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்தார். உடன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் மற்றும் மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள்,மதுரை நகர பாஜக தலைவர் மாரி சக்ரவர்த்தி, மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம்ஆகியோர் இருந்தனர்.
Next Story

