ஆற்காடு அருகே பசு மாடுகள் திருடியவர் கைது

X
ஆற்காடு எல்லைக்கு உட்பட்ட பாலாற்றங்கரையோரம் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற 6 பசுமாடுகள் திருட்டு போனதாக மாட்டின் உரிமையாளர்கள் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மாடு திருடிய நபரை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலை 30 வெட்டி கூட்ரோடு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக அங்கு நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் வாலாஜா தாலுகா 30 வெட்டி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் (வயது 38) என்பதும், ஆற்காடு பாலாற்றங்கரை ஓரம் மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்த 6 பசு மாடுகளை திருடிய தும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

