ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!
X
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் குடிமைப்பணிகள் தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் குடிமைப் பணிகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) தேர்வுகள், ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவில் உள்ள ஆதிபராசக்தி அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) நாளை (திங்கட் கிழமை) முதல் 10-ந் தேதி வரை காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் நடைபெற உள்ளது.மேற்கண்ட தேர்வு கூடத்தில் அனைத்து நாட்களிலும் சேர்த்து மொத்தம் 257 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்விற் காக கூடுதல் சிறப்பு பஸ் வசதிகள், தடையில்லா மின்சாரம், காவல்துறை பாதுகாப்பு மற்றும் இதர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்கு காலை 8 மணி முதல் 9 மணிக்குள் வருகை புரிய வேண்டும். மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் வருகை புரிய வேண்டும். தாமதமாக வருபவர்கள் தேர்வு கூடத்திற்குள் எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய வழி காட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு கால தாமதமாக வராமல் குறித்த நேரத்திற்கு முன்பு தேர்வு மையத் திற்கு வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story