நூலக மனிதர்கள் அமைப்பின் சார்பில் பாராட்டு விழா

X
தூத்துக்குடியில் நூலக மனிதர்கள் அமைப்பின் சார்பில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தூத்துக்குடியில் காமராஜர் கல்லூரியில் நூலக மனிதர்கள் அமைப்பின் சார்பில் பாரதிய பாட்ஷா பரிஷத் விருது பெற்ற எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா மற்றும் இலக்கிய விழா ஆசிரியர் ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராம்குமார் வரவேற்புரையாற்றினார். நூலக மனிதர்கள் பொறுப்பாளர் பொன் மாரியப்பன் அறிமுக உரையாற்றினார். அம்பாள் முத்து மணி வாழ்த்துரை வழங்கினார். அபிஸ் காபி நிறுவனர் மற்றும் ஆறுமுகசாமி, சண்முக நாடார் மிட்டாய் கடை சாய்ராமன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. மருத்துவர் ஞானராஜ், குடிமைப் பொருள் வழங்கல் வட்டாட்சியர் முகமது காசிம் மஸ்தான், ஜேசன் தர்மராஜ், வினோத் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் புத்தக வாசிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

