குழந்தைகளுக்கான கணித திறன் போட்டி.

மதுரையில் குழந்தைகளுக்கான கணித திறன் போட்டி நடைபெற்றது
மதுரை தமுக்கம் உள் அரங்கில் பிரைன் ஓ பிரைன் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் சுப்பிரமணியம் அவர்கள் தலைமையிலும், நிர்வாக ஒருங்கிணைப்பாளர் செந்தில் அழகர் அவர்கள் முன்னிலையில் தென் மண்டல அளவிலான குழந்தைகளுக்கான கணித திறன் போட்டி இன்று (ஆக.3) நடைபெற்றது, இந்த போட்டியில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 4500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர், இப்போட்டி மூன்று நிமிடங்களில் 60 கணக்குகளை சமன் செய்ய வேண்டும் என்ற முறையில் நடைப்பெற்றது, இப்போட்டிக்கு கடந்த 45 நாட்களாக குழந்தைகள் பயிற்சியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது, இப்போட்டி குழந்தைகளுக்கும் நேரத்துக்குமான போட்டியாக பார்க்கப்படுகிறது, இப்போட்டியில் பங்குபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன.
Next Story