ஊத்தங்கரை அருகே டூவீலர் கவிழ்ந்து வாலிபர் பலி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பிரசாத் (26) இவர் கடந்த, 31-ம் தேதி அன்று டூவீலரில் சென்றுள்ளார். இரவு கல்லூர் அருகே ஊத்தங்கரை-கல்லாவி சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த பிரசாத்தை தர் மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

