காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

வே முத்தம்பட்டி காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வே. முத்தம்பட்டி கிராமத்தில் வனப்பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது இன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கோவில் ஆண்டு விழாவும் நடக்கிறது இதனை முன்னிட்டு அதிகாலை முதலில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
Next Story