கோவில் அருகே நிழற்குடை அமைக்கும் பணி தீவிரம்

X
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ துர்காம்பிகா கோவில் அருகே உள்ள பயணிகள் நிழற்குடை கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த தொடர் மழையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதம் அடைந்து இடிந்து விழுந்தது. இதனை தொடர்ந்து நிழற்குடை இல்லாமல் பக்தர்கள் அவதி அடைந்து வந்த நிலையில் நிழற்குடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story

