பூதலூர் அரசுக் கல்லூரிக்கு தனியாக புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் : இந்திய மாணவர் சங்க பூதலூர் ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தல்

X
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில், இந்திய மாணவர் சங்கத்தின், 17 ஆவது ஒன்றிய மாநாடு என்.வி நினைவகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு, மாணவர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் ஆதித்யன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஷாம் வரவேற்றார். மாவட்டத் தலைவர் வசந்த் துவக்கவுரையாற்றினார். ஆசிரியர் ஓய்வூதியர் சங்கம் ஒன்றியச் செயலாளர் தெட்சிணாமூர்த்தி, இந்திய மாணவர் சங்கம் முன்னாள் ஒன்றியச் செயலாளர் தமிழ்செல்வன் வாழ்த்திப் பேசினார். மாவட்டச் செயலாளர் ஹரிஷ் நிறைவுறையாற்றினார். மாநாட்டில் 18 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. ஒன்றியத் தலைவராக அரவிந்த், செயலாளராக நவசூர்யா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பூதலூர் ஒன்றிய கிராமப்பகுதிகளில் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி சென்று, திரும்பும் நேரத்தில் போதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அரசு கல்லூரிக்கு என தனியாக சொந்த கட்டடம் கட்டித் தர வேண்டும். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story

