கரூர்-மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாளை கொண்டாடிய இளைஞர்கள்.
கரூர்-மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாளை கொண்டாடிய இளைஞர்கள். சுதந்திர போராட்ட வீரரும் ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவருமான தீரன் சின்னமலை அவர்களின் 220 வது நினைவு தினம் இன்று. பல்வேறு அரசியல் மற்றும் சமுதாய அமைப்பினர் இன்று மாவீரன் தீரன் சின்னமலைக்கு தமிழக முழுவதும் மரியாதை செலுத்தி வருகின்றனர். 1756 -ம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி பிறந்த இவர்1805 ம்ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி தனது 49 வது வயதில் மறைந்தார். அவரது உடலை 1805 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓடா நிலையில் அடக்கம் செய்யப்பட்டார். கொங்கு சமுதாயத்தைச் சேர்ந்த இவர் கொங்கு சமுதாய இளைஞர்களிடையே எழுச்சி ஏற்படுத்தி உள்ளார். இந்நிலையில் இன்று கரூர்-கோவை சாலையில் அவரது திருவுருவப்படத்திற்கு தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை சார்பில் மலர்மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்த வந்தனர். அப்போது இளைஞர்கள், ஒலித்த பாடல்களுக்கு ஏற்றவாறு கைகளில் கொடிகளை ஏந்தி நினைவு நாள் என்பதை மறந்து ஆட்டம் போட்டனர். அப்போது இந்த அமைப்பைச் சேர்ந்த ஆடிட்டர் நல்லசாமி இளைஞர்களிடையே பேசும்போது , ஏற்கனவே 12 இளைஞர்களை இழந்து விட்டோம். ஆகையால் ஆர்ப்பரிக்காமல் அமைதியாக நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நினைவிடத்திற்கு செல்ல வேண்டும் என நினைவூட்டினார். இதன் பிறகு தீரன் சின்னமலை தியாகத்தைப் போற்றும் வகையில் கோஷங்களை எழுப்பி பிறகு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
Next Story






