பேராவூரணி அரசு தொடக்கப்பள்ளி மாணவர் சேர்க்கையில் சாதனை

X
தஞ்சை மாவட்டம், பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின், நிகழ் கல்வியாண்டு (2025 - 26) மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 50 ஐ நிறைவு செய்து சாதனை படைத்து உள்ளது. சாதனைக்கு வித்திட்ட பள்ளியின் ஆசிரியர் காஜா முகைதீன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் நித்யா, துணைத் தலைவர் ஷீலா ராணி, உறுப்பினர் ரிஸ்பால் ஆகியோருக்கு, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கௌதமன், இப்பள்ளியில் வெள்ளிக்கிழமை தலைமை ஆசிரியராக பணியேற்று இருக்கும் வீர.சந்திரசேகரன் மற்றும் இடைநிலை ஆசிரியர் கமலி ஸ்ரீ ஆகியோரும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story

