கோவை: விமான நிலைய ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி உள்ளது - வானதி

சுயம் அறக்கட்டளை மூலம் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை விரைவுபடுத்த விமானத்துறை அமைச்சரை சந்தித்தோம். நாமக்கல் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்களிடம் சிறுநீரகத்தை அகற்றும் முறைகேடு தொடர்பான புகார்கள் வருகின்றன. இதில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் கூறிய அவர், அதில் மாநில அரசு தோல்வியடைந்துள்ளதாக விமர்சித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உடல்நலம் விசாரிக்க சந்தித்ததாக ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா உள்ளிட்டோர் கூறியிருந்ததை குறிப்பிட்ட அவர், தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதம் உள்ள நிலையில் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான் என்றார். பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை என்றும், தேசிய தலைமைதான் கூட்டணி குறித்து முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். வட மாநிலத்தவரின் வாக்குரிமையை மொழி அல்லது மாநில அடிப்படையில் விவாதிக்கக் கூடாது எனவும், அவர்களுக்கெதிராக பேசியே கூடாது எனவும் வானதி சீனிவாசன் எச்சரித்தார்.
Next Story