புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கம்

X
பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் கனிமவள நிதி 36 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் அமைந்துள்ள தான்தோன்றி அம்மன் கோவில் தெரு குண்டும் குழியுமாக பலத்த சேதம் அடைந்து உள்ளதாகவும் அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி சங்கர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். அதன்படி 600 மீட்டர் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு கனிமவள நிதி ரூபாய் 36 லட்சத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்தது. இதனைத் தொடர்ந்து அந்த சாலை அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில், ஒன்றிய குழு பெருந்தலைவர் கண்ணன், அச்சிறுப்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் கோகுலக்கண்ணன், மாவட்ட கவுன்சிலர் வசந்தா கோகுலக்கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் சாரதி ஆகியோர் கலந்துகொண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் துணை தலைவர் மல்லிகா மணி,ஏரி பாசன சங்க தலைவர் வீரராகவன் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

