நெடுங்கல் கிராமத்தில் ஐயா துலங்கும் பதிவில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாளிக்கும் நிகழ்ச்சி

X
நெடுங்கல் கிராமத்தில் ஐயா துலங்கும் பதிவில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாளிக்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் அருகே நெடுங்கல் கிராமத்தில் ஐயா துலங்கும் பதிவில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாளிக்கும் நிகழ்ச்சி நிறுவனத் தலைவர் கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் சாமித்தோப்பு தலைமை பதி குரு பால ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டு திரு நடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகராஜா, மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி தலைவர் துரை பழம், ஐயா நந்தகுமார் சுவாமிகள், மணலி திருநடை பணிவிடையாளர் ஆதி லிங்கம் ஐயா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பல்வேறு சேவைகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
Next Story

