கோவை: ஆம்னி பேருந்து பறிமுதல் – போக்குவரத்து அலுவலருடன் உரிமையாளர்கள் வாக்குவாதம்

X
கன்னியாகுமரியில் இருந்து கோவைக்கு வந்த பி.எஸ்.எஸ் நிறுவன ஆம்னி பேருந்து, மாநில சாலை வரி செலுத்தவில்லை எனக் கூறி கோவை பீளமேடு வட்டார போக்குவரத்து அலுவலர் விஸ்வநாதன் தலைமையிலான குழுவால் நீலாம்பூர் பகுதியில் நிறுத்தி வைத்து சோதனை செய்யப்பட்டது. அப்போது தேசிய பர்மிட் பெற்ற பேருந்துக்கு மாநில சாலை வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என்ற உச்சநீதிமன்ற உத்தரவை காட்டியும் அதிகாரிகள் அங்கீகாரம் அளிக்கவில்லை. உரிமையாளர்கள், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும் வரி ஆன்லைனில் செலுத்த முடியாத நிலை இருப்பதையும் தெரிவித்தனர். பேருந்து ஓட்டுநரிடம் அபராத ரசீதை தரத் தயங்கிய அதிகாரிகள், பேருந்தை அலுவலகத்திற்குள் கொண்டு வருமாறு கூறியதால் வாக்குவாதம் உருவானது. இதனால் ஆம்னி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் போக்குவரத்து அலுவலரை முற்றுகையிட்டதால், மூன்று மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு நிலவியது.
Next Story

