தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

X
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமயமாதா ஆலய ஆலய 443வது கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் செபமாலை, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் நடந்து வருகிறது. ஆக.5ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலி, இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு இன்று ஆக.3 முதல் 6ஆம் தேதி வரை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 272 விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Next Story

