மாயனூர்- பாசன வாய்க்காலில் ஆடி பதினெட்டு கொண்டாடிய பெண்கள்.

மாயனூர்- பாசன வாய்க்காலில் ஆடி பதினெட்டு கொண்டாடிய பெண்கள்.
மாயனூர்- பாசன வாய்க்காலில் ஆடி பதினெட்டு கொண்டாடிய பெண்கள். கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவனை கட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மேட்டூரில் திறக்கப்பட்ட உபரி நீர் காவிரி ஆற்றில் வெள்ளமாக சென்றது. கடந்த நான்கு நாட்களாக நீரின் வரத்து குறைந்ததால் தற்போது 17 ஆயிரம் கன அடி நீர் வரை காவிரி ஆற்றில் செல்கிறது. ஆண்டுதோறும் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கென்று ஏதேனும் அசம்பாவிதம் நடந்து நீரில் மூழ்கி உயிரிழப்புகளும் நடைபெற்று வந்தது. ஆகையால் காவிரி ஆற்றில் குளிப்பதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இதனால் மாயனூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மாயனூர் கதவுணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் வாய்க்கால் கரையில் வைத்து ஆடி 18 கான பூஜைகளை செய்து முளைப்பாரிகளை வாய்க்காலில் கரைத்து சென்றனர். ஆயினும் மாயனூரில் ஒரு சில உள்ளூர் வாசிகள் ஆபத்தை உணராமல் காவிரி ஆற்றில் குளித்தனர். காவிரி ஆற்றில் நீராடவும், சாமி கும்பிடவும் அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Next Story