கோவை அரசு ஆஸ்பத்திரியில் கழிவுநீர் பிரச்சனை – நோயாளிகள், உறவினர்கள் அவதி

X
கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறி, துர்நாற்றம் வீசும் நிலையில் இருக்கிறது. இதனால், சிறுவர்கள் சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, வெறிநாய் கடி சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் தினமும் சிகிச்சைக்காக வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் சுகாதார சீர்கேடால் அவதிப்பட்டு வருகின்றனர். மேற்கு மண்டலத்தில் முக்கியமான மருத்துவமனையாக விளங்கும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் இத்தகைய சுகாதார சிக்கல் இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
Next Story

