பச்சபட்டி- சரக்கு வாகனம் திடீரென வலது புறம் திருப்பியதால் டூ வீலர் மோதி விபத்து.

பச்சபட்டி- சரக்கு வாகனம் திடீரென வலது புறம் திருப்பியதால் டூ வீலர் மோதி விபத்து.
பச்சபட்டி- சரக்கு வாகனம் திடீரென வலது புறம் திருப்பியதால் டூ வீலர் மோதி விபத்து. கரூர் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் வயது 29. இவர் தனக்கு சொந்தமான டூவீலரில் ஆகஸ்ட் 1ஆம் தேதி மதியம் 12 மணியளவில் கரூர் - பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் பச்சைப்பட்டி , ஜல்லிப்பட்டி பிரிவு அருகே சென்றபோது , இவருக்கு முன்பாக நாமக்கல் மாவட்டம் , மோகனூர், கிரயூர் பகுதியைச் சேர்ந்த ராகுல் வயது 30 என்பவர் வேகமாக ஓட்டி சென்ற சரக்கு வாகனம் மகேந்திரன் டூவீலரை முந்தி சென்று, திடீரென எவ்வித சிக்னாலும் வெளிப்படுத்தாமல் வலது புற சாலையில் திருப்பியதால் பின்னால் வந்த மகேந்திரன் டூவீலர் சரக்கு வாகனத்தின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மகேந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த மகேந்திரனின் மனைவி தங்கமணி வயது 28 என்பவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சரக்கு வாகனத்தை சிக்னல் ஏதும் வெளிப்படுத்தாமல் திடீரென திருப்பி விபத்தை ஏற்படுத்திய ராகுல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story