கருநல்லியா கவுண்டனூர் -முதியவர் சென்ற சைக்கிள் மீது டூவீலர் மோதி விபத்து.
கருநல்லியா கவுண்டனூர் -முதியவர் சென்ற சைக்கிள் மீது டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் , ஜெகதாபி, மேற்கு காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி வயது 70 . இவர் ஜூலை 31ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கரூர் - மணப்பாறை சாலையில் அவரது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் கருநல்லியா கவுண்டனூர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது , கரூர் மாவட்டம் , கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, பம்பரமுத்தம்பட்டி , அரிஜன காலனி பகுதியைச் சேர்ந்த தங்கராசு வயது 23 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூவீலர், ரங்கசாமி ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ரங்கசாமியின் மகன் சத்தியமூர்த்தி வயது 38 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தங்கராசு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story





