அன்னூரில் அரசு பஸ் விபத்து தவிர்ப்பு: டிரைவருக்கு பாராட்டு !

X
அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை அரசு பஸ் ஒன்று பெரும் விபத்தை தவிர்த்து பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. சுமார் 50 பயணிகளுடன் கோவையிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற பஸ், அலுவலகம் அருகே சென்றபோது எதிரே வந்த காரைத் தவிர்க்க டிரைவர் அருண் சாமர்த்தியமாக பஸ்ஸை வலது புறம் திருப்பி ஆலமரத்தில் மோதி நிறுத்தினார். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவத்தின் போது அருகில் இருசக்கர வாகனத்தில் இருந்த ஷியாம் (26) லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். டிரைவர் அருணின் செயலுக்கு பொதுமக்கள் மற்றும் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.
Next Story

