பர்கூர் அருகே குட்டூரில் பயணிகள் நிழற்கூடத்தை திறந்து வைத்த எம்.பி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் சூலாமலை ஊராட்சிக்கு உள்பட்ட மேல்கொட்டாய் கிராமத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டடம், குட்டூா் ஊராட்சிக்கு உள்பட்ட குட்டூரில் ரூ. 5 லட்சம் மதிப்பில் பயணியகள் நிழற்கூடம் ஆகியவற்றை மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரை மக்கள்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்துவைத்தாா். தொடா்ந்து, சேக்கினப்பட்டி கிராமத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டடம் கட்டும் பணியை மு.தம்பிதுரை எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்ட அதிமுகவினா், பலர் கலந்துக்கொண்டனர்.
Next Story

