ராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்...

ராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி  அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்...
X
ராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பெருக்கு ஆடி 18 முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதேபோல் உற்சவர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பின்னர் உற்சவர் மற்றும் மூலவர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Next Story