வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தர கோரி மனைவி, போக்குவரத்து துறை அமைச்சரிடம் கண்ணீருடன் மனு

உடனே நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமைச்சர்
வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டு தர கோரி மனைவி, போக்குவரத்து துறை அமைச்சரிடம் மனு, நடவடிக்கை எடுத்த அமைச்சர். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை துவக்கி வைத்த போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சரிடம், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வடக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் - (43) இவரது மனைவி கவேரி - 39 மற்றும் அவரது பிள்ளைகள் ஆனந்தி, சக்திதாசன் ஆகியோர் கண்ணீர் மல்க வேண்டி, மனு கொடுத்தனர். அதில் இரண்டரை ஆண்டுகளாக மலேசியாவில் ஹோட்டல் ஒன்றிப் வேலை பார்த்து வந்த தனது கணவர் ரமேஷ் நேற்று திடீர் என உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது, மேலும் அவரது உடலை பெற வழி தெரியாமல் தவித்து வருவதாகவும், தனது கணவரின் உடலை மீட்டு தர வேண்டுமென கேட்டு கொண்ட, மனுவை பெற்ற அமைச்சர் சா.சி. சிவசங்கர் உடனடியாக வருவாய் கோட்டாட்சியரை அழைத்து, அவரிடம், வெளிநாட்டில் உயிரிழந்த ரமேஷ் உடலை அவரது மனைவிக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
Next Story