விவசாயம் செழிக்க சக்திபீடத்தில் கஞ்சி கலய‌ ஊர்வலம்!

விவசாயம் செழிக்க தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் கஞ்சி கலய‌ ஊர்வலம்!
தூத்துக்குடி திருவிக நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் மழைவளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வேண்டி கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி 3வது மைல் அருகே திருவிக நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் மழைவளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், தொழில்வளம் பெருகவும், கல்வி அறிவு சிறக்கவும் வேண்டி அதிகாலையில் குரு பூஜை, வினாயகர் பூஜையுடன் துவங்கியது. கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஆன்மிக கஞ்சி கலய‌ ஊர்வலத்தை வேளாண்மைத்துறை அதிகாரி பிரேம்குமார் துவக்கி வைத்தார். ஆன்மிக ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சக்திபீடத்தை வந்தடைந்து அன்னைக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தொழில் நுட்ப ஒருங்கினைப்பாளர் கோபிநாத் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். ஆன்மிக இயக்க மாவட்ட ஒருங்கிணப்பாளர் சக்தி முருகன் முன்னிலையில் மக்கள் வேண்டுதல்கள் நிறைவேற கருவறை அன்னைக்கு பக்தர்கள் பால் அபிஷேக நிகழ்ச்சியை கூட்டுறவு பண்டகசாலை பொதுமேலாளர் கந்தசாமி தொடங்கி வைத்தார். அன்னதானம் மற்றும் அருட்பிரசாதம் வழங்கும் பணியை காவல் உதவி ஆய்வாளர் பெருமாள் தொடங்கி வைத்தார். விழாவில், அண்ணாநகர் மன்ற தலைவர் சிவஞானம், தளவாய்புரம் மன்ற தலைவர் ராஜூ, திருச்செ செந்தூர் மன்ற தலைவர் மாரியப்பன், சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், பொருளாளர் அனிதா, இளைஞர் அணி பாலசுப்ரமணியன், மகளிர் அணி செல்வி, கிருஷ்ணவேணி, அகிலா, முத்துலெட்சுமி, புவனேஷ்வரி, ஜெயலெட்சுமி, புதுக்கோட்டை முத்துமாரி, பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story