ராமநாதபுரம் யோகா போட்டி நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்ட யோகாசனம் சங்கம் சார்பில் தமிழ்நாடு யோகாசனம் சங்கம் 5 ம் ஆண்டு போட்டி ராமநாதபுரம் ஆல்வின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான யோகாசனம் போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் மாவட்ட முழுவதும் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டது, சிறு குழந்தைகள் முதல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமை மற்றும் குழுப் போட்டிகளில் பங்கெடுத்தனர் யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் குழந்தை பருவம் முதல் பள்ளிப் பருவம் வரை யோகாசனத்தில் ஈடுபடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும் உடல்வாகு சீராக இருக்கும் எடை சரியாக இருக்கும் கல்வியில் குறிக்கோள் அடைவதற்கு உந்து சக்தியாக இருக்கும் ராமநாதபுரம் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெறுவார்கள் என மாவட்ட யோகாசன சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் , சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்
Next Story




